பூலித்தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.. பெருந்திரளாக திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பூலித்தேவர்  சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை..  பெருந்திரளாக திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பூலித்தேவர் அவர்களின் 307-வது பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் அவரது  திருவுருவ சிலைக்கு மாலையிட வந்த  ஓ.பன்னீர்செல்வத்திற்கு  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பூலித்தேவர்  சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை..  பெருந்திரளாக திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பூலித்தேவன் 307 வது பிறந்தநாளையொட்டி  பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.  அத்துடன்  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா  (வியாழக்கிழமை) இன்று நடைபெறுகிறது. 

இன்று   காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, அவரது  நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மாலையணிவித்து மரியாதை செலுத்த   நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

பூலித்தேவர்  சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை..  பெருந்திரளாக திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

அந்தவகையில், மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 307-வது பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு  அதிமுக  கழக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த அக்கட்சித் தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பூலித்தேவர்  சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை..  பெருந்திரளாக திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

முன்னதாக அவர்  நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போதும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி, நத்தம்பட்டி,  சங்கரன்கோவில் என செல்லும் வழிகளில் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு வரவேற்ப்பளித்தனர்.