ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று இல்லை?!

 
ops

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

op

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ப 2,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இதன் காரணமாக அவர் சென்னை குரோம்பேட்டையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ops

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.