விகடன் குழும இயக்குனரின் தாயார் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்..

 
Ops

விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர்   சீனிவாசன் அவர்களது தாயார்  சரோஜா பாலசுப்ரமணியன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான  மறைந்த  எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் (86),  நேற்று (  ஞாயிற்றுக்கிழமை -  நவம்பர் 6) காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னதாக இரங்கல் தெரிவித்திருந்தனர்.  

விகடன் குழும  இயக்குனரின் தாயார் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்..

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது இரங்கல் தெரிவித்திருக்கிறார்.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிரபல பத்திரிகையாளரும், விகடன் குழுமத்தின் உரிமையாளருமான மறைந்த திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின் மனைவி திருமதி சரோஜா பாலசுப்பிரமணியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தாயை இழந்து வாடும் அவரது மகனும், விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு. பா. சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.