அதிமுகவில் கட்சியை விட்டு நீக்கியது எல்லாம் கண்துடைப்பு? ஓபிஎஸ் சகோதரருக்கு மட்டும் ஒரு நீதி!!

 
ops

சசிகலாவை சந்தித்ததாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் அதிமுக விழாவில்  பங்கேற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

OPS's brother meets Sasikala in Tiruchendur- The New Indian Express

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட பலரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து ஓ.ராஜா உள்ளிட்டவர்களை சசிகலாவை சந்தித்ததாக கட்சியை விட்டு நீக்கினார். இந்த நீக்கம் பற்றி கடும் கண்டனம் தெரிவித்த  ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக ஓ.ராஜா பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். பின்னர் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று ஓ.ராஜா செய்து வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவினர் ஓ.ராஜாவிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்சித் தலைமை அறிவித்திருந்தது. எனவே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத் பங்கேற்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மேடையில் ஏறாமல் கீழே நின்று கலந்து கொண்ட ஓ.ராஜா விழா மேடைக்கு அழைக்கப்பட்ட போதிலும் அதை நிராகரித்துவிட்டு மேடைக்கு கீழே நின்று கொண்டிருந்தார். மேலும் கீழே நின்று கொண்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவர் முன்னின்று நடத்தினார். இதனை பார்த்த அதிமுகவினர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட ஓ.ராஜா எவ்வாறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்? அதுவும் விழா ஏற்பாட்டை முன்னின்று நடத்துகிறார்? எனவே வழக்கம் போல் ஓ.ராஜா பக்கம் ஆதரவு தெரிவிப்பதா அல்லது கட்சி மேலிடம் எடுத்த முடிவுக்கு கட்டுப்படுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.