பெரியகுளம் வீட்டில் ஓபிஎஸ்! திரண்டு வந்த ஆதரவாளர்கள்

 
o

அதிமுகவில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு பின்னர் சொந்த ஊரான பெரிய குளம் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ஓபிஎஸ்.   அங்கே  அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்துள்ளார்கள்.  

 அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றி பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.   ஆனால் தேர்தல் ஆணையமோ, . அதிமுகவில் சட்ட விதிகள் எதுவும் மாற்றப்படவில்லை சட்ட விதிகள் எதுவும் மாற்றச் சொல்லி கடிதம் புறப்படவில்லை என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. 

sy

 ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்கிற நிலைக்கு சென்று விட்டதால்,   ஓபிஎஸ் உடன் சசிகலா இணைவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன .  அதை உறுதிப்படுத்தும் விதமாக  இன்று ஆண்டிப்பட்டிக்குச் சென்ற டிடிவி தினகரனை ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.   ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான சையது தான் தினகரனுடன் 10 நிமிடங்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

 இந்நிலையில் தனது சொந்த ஊரான பெரியகுளம் வீட்டிற்கு ஓபிஎஸ் சென்று இருக்கிறார்.   தேனி மாவட்ட நிர்வாகிகள்,  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.