#Breaking ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி!!

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

ops

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ்,  காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேராவை எதிர்த்து போட்டியிட்டார்.  இதில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.  சமீபத்தில் திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில்  தமிழ் மாநில காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் காண்கிறது. 

tn

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு; 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல;  சட்ட விரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்.  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை எங்களது கோரிக்கை. கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன . பாஜக, பாமக ,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.  பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று தெரிவித்தார்.