பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது சந்திப்பேன் - ஓபிஎஸ் பேட்டி

 
ops

பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக அவரை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார். அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வடுவாக வளர்த்தார். வலிமையான அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்து வலிமையான இயக்கமாக இருபெரும் தலைவர்களும் தொண்டர்கள் கையில் தந்துள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு கூறினார். 

Ops

இதனிடையே தமிழகம் வருகிற பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி அவர் வந்தால் சந்திப்பேன் என கூறினார். இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன, ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்றார்.