"வரவு, செலவு கணக்கை மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பேன்" - கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்!!

 
ops

அதிமுகவின் வரவு, செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ளார் . அதன்படி நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் இதை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தானே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் கூறினார்.இது அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

admk

அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி அலுவலகம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வை ஏற்கக் கூடாது என்றும்  அங்கீகாரம் தரக்கூடாது என்றும் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம்  மனு அளித்துள்ளார்.  இதனிடையே ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர்  பதவி தற்போது திண்டுக்கல் சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் சீனிவாசன் தான் இனி கட்சியின் புதிய பொருளாளர் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். 

admk

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி இன்றுவரை தான்தான் ஒருங்கிணைப்பாளர் ; நான்தான் பொருளாளர்.  நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது என்னை  கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது என்று கரூர் வைசியா வங்கிக்கு . பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளது.  வரவு செலவு கணக்கு மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.