தேவர் சிலைக்கு 10. 5 கிலோ வெள்ளி கவசம் வழங்கிய ஓ.பி. எஸ்..

 
தேவர் சிலைக்கு  10. 5 கிலோ வெள்ளி கவசம் வழங்கிய ஓ.பி. எஸ்..

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீஎ செல்வம்  10. 5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசம் வழங்கியுள்ளார்.  

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஜெயந்தி விழா மற்றும்  60 ஆவது குருபூஜை விழாவில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. தேவர் குருபூஜை விழாவில் அவருக்கு சாத்துவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 14 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இந்த கவசத்தை நிர்வகிக்கும் பொறுப்பானது  அதிமுகவின் பொருளாளருக்கும்,  தேவர் திருக்கோயிலின் நிர்வாகி காந்தி மீனாள் அம்மையாரிடமும் கொடுக்கப்பட்டது.   மதுரையில் உள்ள ஒரு வங்கி கிளையின் பெட்டகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் இந்தக்கவசம்  ஆண்டுதோறும் தேவர் குருபூஜை விழாவின் போது வெளியே எடுக்கப்பட்டு  அவருக்கு சாத்தப்பட்டு பின்னர் மீண்டும் வங்கியில் பாதுகாக்கப்படும்..   

தேவர் சிலைக்கு  10. 5 கிலோ வெள்ளி கவசம் வழங்கிய ஓ.பி. எஸ்..

ஆனால் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் வெடித்ததும்,  கவசம் யார் பொறுப்பில் இருக்கும் என்கிற கேள்வி எழுந்தது.   இதனால் என்ன செய்வதென்றே தெரியாத வங்கி நிர்வாகம், அந்த கவசத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் இன்று தேவர் ஜெயந்தி மற்றும்  தேவர் குருபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக  பசும்பொன் வந்த  ஓபிஎஸ், புதிதாக செய்யப்பட்ட  10. 5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவருக்கு வழங்கினார். இதன் விலை ரூ 9.11 லட்சம் என்று கூறப்படுகிறது.   அதேபோல்  வெள்ளியால் ஆன   ருத்ராட்ச மாலையும் ஓ.பன்னீர்செல்வம்  வழங்கினார்.  

தேவர் சிலைக்கு  10. 5 கிலோ வெள்ளி கவசம் வழங்கிய ஓ.பி. எஸ்..

அதன்பிறகு பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுக சார்பில்தான் வெள்ளிகவசத்தை கொடுத்தேன். நான்தானே ஒருங்கிணைப்பாளர். பெரியம்மா காந்தி மீனாளிடம் கொடுத்துவிட்டோம். அவர் எப்போது அணிவிப்பார் என தெரியவில்லை.” என்றார்.  தங்க கவசம் கைக்கு கிடைக்காததால்  எடப்பாடி பழனிசாமி,  தேவர் குருபூஜைக்கு செல்லவில்லை என்று  கூறப்படுகிறது.  ஆனால்  பன்னீர்செல்வமோ,   தங்கம் இல்லை என்றால்  என்ன வெள்ளி கவசம் வழங்கி, அதனை  அதிமுக சார்பில் கொடுத்ததாக அறிவிப்பார் என அதிரடியாக கூறியிருக்கிறார்.  இது  எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.