'ஈபிஎஸ் மனுக்களை நிராகரிக்க வேண்டும்' - சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!!

 
ttn

அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றியமைக்கும்படி மனுக்கள் வந்தால், அவற்றை நிராகரிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

ops
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை விஸ்வரூபம் எடுத்த நிலையில் நேற்றைய  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதை தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் இதை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தானே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் கூறினார். இதனால் ஓபிஎஸ்  -ஈபிஎஸ்  மோதல் மேலும் வலுத்துள்ளது. 

ep

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும்.  அதிமுக பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் அந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று  ஓபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பி.எஸ் இருந்து வருகிறார். தற்போதுள்ள சூழலில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்படவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

முன்னதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்  தான் என்று வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிய நிலையில், அதிமுகவின் வரவு, செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.