பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய திடீர் கடிதம் - காரணம் இதுதான்!!

 
ops

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

op

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "தாய்லாந்துக்கு வேலைக்காகச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உட்பட கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் கடத்தப்பட்டு மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதை முதலில்  உங்கள் உடனடி கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தியக் குடிமக்கள் தங்கள் அறிவுரைகளைக் கடைப்பிடிக்க மறுப்பதால், அவர்களுக்குத் தண்டனையாக எலக்ட்ரிக் ஷாக் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

tn

மியான்மரில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அப்பாவி குடிமக்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதை உறுதி செய்வது அவசியம். எனவே, நீங்கள் தயவுசெய்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இந்தியர்களை  பாதுகாக்க மியான்மரின் உயர் மட்டத்தில் விஷயத்தை எடுத்து சென்று,  அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்குத் திரும்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.