#BREAKING அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தர்ணா

 
tn

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெளியே ஓபிஎஸ் தர்ணாவில் ஈடுபட்டார்.

tn

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த சூழலில் அதிமுக பொது குழுவை புறக்கணித்த பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில்  அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் . ஓ பன்னீர்செல்வத்தின் வருகையின் போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.  இதில் கற்களை கொண்டு இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். அத்துடன் அதிமுக அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர் .இதன் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக அலுவலகத்திற்கு அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

tn

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், காவல்துறையினர் 2 பேரும் காயமடைந்தனர்.  இதனால் ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும்  அவரது ஆதரவாளர்களை வெளியேற வருவாய்த்துறையினர் அறிவுறுத்திய நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

tn

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.  அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு  தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து கிளம்பினார்.