ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஓ.பி.எஸ். குடும்பத்துடன் வழிபாடு

 
ops

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் வந்து வழிபாடு செய்தார். 

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமேஸ்வரம் வந்துள்ளார். அவருடன் மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக்குழந்தைகள் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்.  பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராடினார். அவர் தனது மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார்.  இன்று மாலை தனது குடும்பத்துடன் ராமநாதசுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து அவர் ஓ.பன்னீர்செல்வம் காசிக்கு சென்றும் வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.