எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

 
ops

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

assembly

இதனிடையே சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர்  சபாநாயகர் அப்பாவு உடன் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

இந்தநிலையில், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். எனவும் தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.