NET தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 
NET

NET தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூலை மாதத்துக்கான யுஜிசி தேசிய தகுத் தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று  பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்படி 2021 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவிருந்த NET தேர்வையும், 2022 ஜூனில் நடத்தப்பட உள்ள NET தேர்வையும் ஒரே நேரத்தில் நடத்துகிறது தேசிய தேர்வு முகமை. 

NET


 
UGC - NET தேர்வுக்கு வரும் 20-ம் தேதி வரை https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு தேதி, ஹால் டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தேர்வினை பல்கலைக்கழக மானியக் குழுவிற்காகத் தேசிய தேர்வு முகமை தற்போது நடத்தி வரும் நிலையில், ஜூலை 2018 வரை, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) யுஜிசி நெட் தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.