வடகிழக்கு பருவமழை முதல் மழை பொழிவு-இந்த 17 மாவட்டங்களில் நாளை கனமழை

 
r

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை நாளை தமிழகத்தில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முதல் மழை பொழிவு நாளை தொடங்க இருக்கிறது.   இந்த முதல் மழைப்பொழிவு நாளை முதல் அடுத்த மாதம் நாலாம் தேதி வரைக்கும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

rr

 இதனால் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் ,   திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

 நாளை மறுதினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், கோவை, நீலகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.