இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - வழக்கம் போல் இயங்கும்

 
s

தமிழகத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.   தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்டு இருந்த விடுமுறையை ஈடு செய்ய இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

d

 கடந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.   இதனால் தீபாவளிக்கு பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக தீபாவளி பண்டிகைக்கு தினத்திற்கு மறுதினம் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

 இந்த கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு,  பள்ளிகள்- கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் 25. 10. 2022 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.  அந்த விடுமுறையை ஈடு செய்கின்ற வகையில் நவம்பர் 19ஆம் தேதி அன்று பணி நாளாக  அனுசரிக்கப்படும் என்று அரசு அப்போது அறிவித்திருந்தது.  அதன்படி இன்று 19.11.2022ல்  கல்லூரிகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இயங்கும் என்று  அரசு அறிவித்திருக்கிறது.