எந்த குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்க கூடாது - குழந்தைகள் தினத்தில் முதல்வர் உருக்கம்

 
c

 இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.   இந்த குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில்  குழந்தைகளுக்கு ’புத்தக பேக் இலவச நாள்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

c

 இன்றைய தினம் பள்ளிகளுக்கு குழந்தைகள் புத்தகங்கள் எடுத்துச் செல்லாமல், விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எடுத்துச்செல்ல பள்ளிகள் அறிவித்திருக்கிறது. பள்ளிகளில் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை திறன்கள் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

 இந்த நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.  இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,   குழந்தைகள் நலனில் அக்கறை உள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது குழந்தைகளின் மன நலன், உடல் நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.  எந்த குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக் கூடாது என்பது அரசின் இலக்கு என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.