அடுத்த அதிர்ச்சி வீடியோ! டெஸ்க்கை தூக்கி ஆசிரியரை தாக்க ஓடிய மாணவர்

 
te

அரசு பள்ளிகளில் மாணவர்களின் அராஜகத்தால் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அவமரியாதை நடந்துவரும் நிலையில் அதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,   அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு பெண் ஆசிரியரின் முன்னாள் மாணவர்கள் நடனமாடுவதும், அவரின் பின்னால் நடனம் ஆடுவதும் திட்டியதால் டெஸ்க்கை தூக்கிக் கொண்டு அடிக்க பாய்வதுமான அந்த வீடியோவை வைரலாகி வருகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

tee

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளியாடி பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது . இந்த மேல்நிலைப்பள்ளியில் கடந்த வியாழக்கிழமை அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

 பதினொன்றாம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனம் ஆடுகிறார்.  இன்னொரு மாணவர் ஆசிரியரின் பின்னால் நின்று நடனமாடுகிறார் . ஒரு மாணவர் மேஜையின் மேல் ஏறி நினறு நடனமாடுகிறார் . இதை பார்த்து ஆசிரியர் கடுமையாக திட்டுகிறார்.  அப்போது ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக்கொண்டு ஆசிரியரை அடிக்க ஆவேசமாக பாய்கிறார். 

vi

  இதை ஒருவர்  வீடியோவாக எடுத்து அதில் பின்னணியிசை சேர்த்து பாடல்கள் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 ஆசிரியரை ஒரு மாணவன் அடிக்க பாய்ந்ததும்,  அசிங்க அசிங்கமாக அவர் குடும்பத்தையும்  திட்டியதும்  என்று தொடர்ந்து ஆசிரியர்களை அவமானப் படுத்தப்பட்டு வருவது கவலைக்குரியதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

 இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மார்த்தாண்டம் போலீசார்,  குழித்துறை கல்வி மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளியில் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.