திருமணமான ஐந்தே நாளில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

 
suicide

திருமணம் ஆன ஐந்தே நாளில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவிடைமருதூர் அருகே கோவில்சன்னாபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான ஐந்து நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை

திருவிடைமருதூர்  அருகே உள்ள கோவில் கோவில்சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த  பிரசாத் (வயது 30) வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பியவர். இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி பந்தநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த இரண்டு தினங்களாக மனைவியுடன் சரியாக பேசாமல் மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன் தினம் பிரசாத் குடும்பத்தினர் மது அருந்துவதை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் 9ம் தேதி இரவு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டவர் தூக்கு போட்டு கொண்டார். இதை கவனித்த உறவினர்கள் உடனடியாக பிரசாத்தை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே பிரசாத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமணமான ஐந்து நாளில் வாலிபர் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவருக்கும் திருமணம் நடந்து இன்று ஞாயிற்றுக்கிழமை கறி விருந்து நடத்தப்பட இருந்த நிலையில் இன்று அந்த மாப்பிள்ளைக்கு பால் தெளியல் நடைபெறுவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரசாத்திற்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. புதுப்பெண்னை தாய் வீட்டார் உடனடியாக தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.