அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்

 
op

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் சென்னை ஒரு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே இந்த வழக்கு விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து நீதித்துறை பதிவாளரிடம் மனு அளித்திருந்தார். இதே போல் ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்பு முறையிடப்பட்டது.

Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute

தலைமை நீதிபதி எந்த முடிவும் எடுக்காத நிலையில் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல் புகார் தெரிவித்திருப்பது கீழ்த்தரமானது களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணை வந்தபோது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நடைமுறை பிரச்சனை குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதி , இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடமே இதை நேரடியாக தெரிவித்து இருந்தால் நானே விலகியிருப்பேன் என்றும் தற்போது தலைமை நீதிபதியிடம் அளித்த புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதாக மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் அழைக்கப்பட்ட புகார் மனு திரும்ப பெற்றுக் கொண்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும் என்று தெரிவித்து வழக்கிலிருந்து விலகினார். 

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க தலைமை நீதிபதி முனீஸ்வநாத் பண்டரி உத்தரவிட்டார்.