100 ஆண்டுகள் பழமையான அரசு கட்டிடத்துக்கு புதிய கட்டிடம்- பேரவையில் அறிவிப்பு

 
moorthy

தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான பதிவாளர் கட்டிடங்களுக்கு,புதிய கட்டிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சிதம்பரம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் 116 ஆண்டுகள் பழமையான அலுவலகம் எனவும், இதனை கருத்தில் கொண்டு தான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், சிதம்பரம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கருத்துருகள் பெறப்பட்டவும் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்

அதேபோல், தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான பதிவாளர் கட்டிடங்கள் அனைத்திற்கும் புதிய கட்டிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்