திருமணமான 9-வது நாளில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள நல்லங்கியூர் பகுதியில் திருமணமான ஒன்பதாவது நாளில் புதிய மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

14-year-old boy electrocuted to death in Karnal - Hindustan Times

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காடப்பநல்லூர் கிராமம் குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகள் விமலா தேவிக்கும் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட நல்லங்கியூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஜீவானந்தம் ஆகிய இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  கணவன் வீட்டில் இருந்த விமலாதேவி நேற்று நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தேவூர் போலீசார் புது மணப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து திருமணமான 9 நாள் ஆன மணப்பெண் தற்கொலைக்கான  காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி அருகே திருமணமாகி ஒன்பது நாட்களே ஆன மணப்பெண் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் புதுமணப்பெண் என்பதால் சங்ககிரி கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.