காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி!

 
tn

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

govt

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று  அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி  மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் காலை உணவு எவ்விததாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தி  உள்ள நிலையில் அதை முறையாக செயல்படுத்த மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளாா். ‘சி.எம்.13 எப்.எஸ்.' என்ற இந்த செயலி மூலம் அதிகாலையில் சமையல் செய்யத் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை இந்த செயலி மூலம் உடனுக்குடன் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரே இதனைக் கண்காணிக்கும் வகையில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது என்றும்  எந்த சமையல் கூடத்தில் உணவு விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது? தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிறதா? என்பதை இதன் மூலம் கண்காணிக்க ,முடியும்.