மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளுக்கு இரவில் செல்ல வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை

 
nellai

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவுநேரங்களில் தோட்டங்களுக்கு தனியாகசெல்ல வேண்டாம் என களக்காடு முண்டந்துறை புலிகள்காப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. . 

நெல்லை மாவட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சார்பில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னெச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே முதல் ஜூலை மாதங்களில் பனம்பழம் ,வாழைப்பழம் மற்றும் கொல்லாம்பழம்  (முந்திரி) ஆகியவை விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி,நரி குரங்கு யானை போன்றவை களகாட்டை விட்டு வெளியேறிவிளைநிலங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களில் இரவு நேரங்களில் தனியாகபடுத்து உறங்குதையோ தனியாக நடப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக தோட்டங்களில் வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பிகாட்டிற்குள் அனுப்புவதற்காகவும் வனத்துறைதனியாககுழுஅமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வனவிலங்குகளை தோட்டங்களில் பார்க்கும்பட்சத்தில் உடனடியாக வனச்சரகருக்கு தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.