பேச்சுவார்த்தை தோல்வி - நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

 
ப்

நாளை மறுதினம் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இதை அறிவித்திருக்கிறது.

 இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி. எச். வெங்கடேசலம்,   ’’வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை இருக்கும் வங்கிகளுக்கு மாற்ற வேண்டும்.  இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால் சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது.   ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

ப்

 இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல்.  சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல் பணி நடவடிக்கை,  பொதுமக்களிடம் வைப்பு தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.  அவர்களுக்கான எந்தவித இழப்பீட்டையும் வழங்கவில்லை . இதற்கெல்லாம் தீர்வு காணுகின்ற வகையில் தான் வேலை நிறுத்தம் செய்வதற்காக வங்கி யூனியன் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 இதை அடுத்து கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடந்தது .அதன் பின்னர் பத்தாம் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சு வார்த்தை நடந்தது.   இந்த பேச்சுவார்த்தையில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.  இதற்கிடையில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று நேற்று வங்கிகள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடந்தது .  இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்.  ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 19ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இருக்கிறார்.