எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்!

 
tn

எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழை மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ளது.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் தரமான சிகிச்சை உட்பட பொது சுகாதார அம்சங்களை பாராட்டி தேசிய தர சான்றிதழை மத்திய சுகாதாரக் குழு வழங்கியுள்ளது.

tn

கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர் . எடப்பாடி அரசு மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு,  வளாக  தூய்மை,  உள் மற்றும் புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் உட்பட பல்வேறு பொது சுகாதார அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதை மத்திய சுகாதாரக் குழு பார்வையிட்டு சென்றது.

central

 இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிறப்பான சேவையை பாராட்டும் வகையில் மருத்துவமனைக்கு தேசிய தர சான்று வழங்கப்பட்டுள்ளது. 125 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு இந்த சான்றிதழ் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக நிதி ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.