“பிஜிஆர் எனர்ஜி- பின்வாங்கிய புதிய தலைமுறை”- பாஜக விளாசல்

 
narayanan thirupathi

பிஜிஆர் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு திமுக அரசு எப்படி சலுகைகள் வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்பதற்கான ஆதாரங்கள் தயாராக இருக்கிறது. இதற்கு தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக செய்தி வெளியிட புதிய தலைமுறை சேனல் தயார் என்றனர். ஒரு மணி இதுகுறித்து பேசுவதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ரெடியாக இருக்கிறார் என அண்ணாமலை கூறினார். நாளை 7 முதல் 8 மணி வரை இதுகுறித்த நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால்,அந்த ஊடக நண்பர், அண்ணாமலைதான் வந்து பேச வேண்டும் என்றார்.

இந்நிலையில் பாஜக மாநிலத்துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னை  பணியமரித்தியிருந்தார். இன்று மாலை  7மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக  இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார். 

ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை.

எது எப்படியிருந்தாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க அண்ணாமலையின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம். புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.