அன்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்பீர்களா முதல்வரே? - பாஜக கேள்வி

 
narayanan stalin

நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஐயோ மூச்சு திணறுதே.. வருமானத்திற்கு திட்டமே இல்லை.. தமிழக பாஜக துணை தலைவர்  ஆதங்கம் | DMK is suffocating in Tamil Nadu politics says BJP vice president Narayanan  Thirupathy - Tamil Oneindia

தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் பெரம்பலூரில் ஒரு கடையிலும் அறிமுகப்படுத்தியிருப்பதாக கூறிய அவர்,விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார். 

இதற்கி கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்" - அமைச்சர் சக்ரபாணி. "ஜனநாயக நாட்டில் அரசின் நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்காக மக்கள் துன்புறுத்தப்படக் கூடாது" என்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்கள் எண்ணிக்கையை குறைக்க இது செய்யப்படுகிறது என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது" என்றும்   எரிவாயு மானியத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பையடுத்து, ஜூலை 8, 2016 அன்று திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. 

அன்று சொன்னது சரியென்றால் இன்று தவறை ஏன் செய்கிறீர்கள்? மு.க.ஸ்டாலின் அவர்களே? இன்று சொல்வது சரியென்றால் அன்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்பீர்களா முதல்வர் அவர்களே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.