குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூ.1000 தேவையா? - பாஜக

 
Narayan tirupati

திமுக தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அய்யோ.. " வீடு புகுந்து வாயில் வெட்டுவார்களாம் ".. காவல் ஆணையர்  அலுவலகத்தில் கதறிய பாஜக நாராயணன். | O God.. "Let's break into the house and  cut the mouth" .. Narayanan ...


இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் . தேர்தலுக்கு முன்னர் ' கஜானா காலி ' என்று சொல்லி வாக்கு சேகரித்த போது , நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை ? இந்த வருடம் முதல் காலாண்டில் தமிழக அரசின் வருவாயில் மது விற்பனை வருவாய் 116.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பெருமை கொள்கிறார் தமிழக நிதியமைச்சர் திரு . தியாகராஜன் அவர்கள் . வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில் , மது விற்பனையை அதிகரிப்பதன் மூலமே வருவாய் அதிகரித்து நிதி நிலை சரியாகிறது என்பது தெளிவாகிறது . 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மதுவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளால் அதிக இளம் விதவைகள் உள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் திருமதி . கனிமொழி அவர்கள் கூறியதை நாம் மறந்து விட முடியாது . குடி குடியை கெடுக்கும் ' என்ற வாசகம் கொண்ட ' சரக்கை ' அதிகம் விற்று பலரின் ' விதி ' யை முடித்து , குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 / தேவையா ? என்பதை முதல்வர் அவர்கள் சிந்திக்க வேண்டும் . ரூபாய் 1000 / - திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும் . கோடிக்கணக்கான தமிழர்கள் வளம் பெறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.