வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழாவின் தேர்பவனி - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 
tn

லூர்து நகர் என்று அழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அன்னை  ஆரோக்கிய மாதா திருக்கோவில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய தினமான நேற்று அன்னையின் தேர்பவனி நடைபெற்றது.

tn

தேர்பவனியை  ஒட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. நேற்று இரவு 8 மணி அளவில் உத்திரயாமாதா அந்தோணியார் உட்பட சிறிய தேர்தல் முன்வர அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தேர் அலங்காரத்துடன் காட்சியளித்து கடற்கரை சாலையில் வலம் வந்தது.  வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக பெரிய தேர் சென்றபோது மழை கொட்டியது .இருப்பினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் திருத்தேர் மீது மலர்களை தூவி தங்கள் வேண்டுதல்களை முன் வைத்தனர்.

tn

இந்நிலையில் இன்று மாலை 6.30  மணிக்கு அன்னை ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பதித்த திருப்கொடியானது இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.  புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.