6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் மனு அவசியமற்றது - சீமான் பேட்டி

 
seeman

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம் எனவும், மத்திய அரசின் மனு அவசியமற்றது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு  கீழ் உருவப்படம் வைக்கப்பட்டு  அலங்காரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று வ.உ.சி-யின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.  

seeman

இதேபோல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:  6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம். மத்திய அரசின் மனு அவசியமற்றது. இந்த விடுதலை நீண்ட நாள் போராட்டமாகும். 6 பேர் விடுதலை விவகாரத்தில் எனக்குள்ள வலி அண்ணாமலைக்கு இருக்க வாய்ப்பு இல்லை. அது அவர்களின் கட்சி கோட்பாடு. விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப வேண்டும். தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை. இதற்காக பாரதிய ஜனதாவை எப்படி உள்ளே விட முடியும். இவ்வாறு அவர் கூறினார்