பட்டினப் பிரவேசத்தை அரசு அனுமதித்தாலும் நான் எதிர்க்கிறேன் - சீமான்

 
seeman

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை அரசு அனுமதித்தாலும் நான் எதிர்க்கிறேன், ஏற்கவில்லை என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். 

2018 மே மாதம் 18 ம் தேதி  OMR சாலையில் உள்ள  YMCA   மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆண்டு விழா  பொதுக்கூட்ட நிகழ்வில் இந்து மதத்திற்கு எதிராகவும் கலவரத்தை தூண்டும் வகையிலும் இளைஞர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியது  தொடர்பாக தரமணி காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பிரிவு  153 A ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில்  அந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

seeman

வழக்கு விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:2018 ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஆண்டு விழாவின் போது  நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா அவர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறி இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சி ஏற்படுத்துவதாக போடப்பட்ட வழக்கிற்காக இன்று நேரில் ஆஜரானேன்,  எடப்பாடி பழனிச்சாமி எதற்கு வழக்கு போடவேண்டும் என்று தெரியாமல்  அந்த சமயத்தில் வழக்கு போட்டுவிட்டார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 10 மணி நேரம் மின்வெட்டு. பிறமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோடை காலத்தில் மின்cut தண்ணீர் cut  எல்லாம் உள்ளது. ஆனால் மணி cut  இல்லாமல் இல்லை. அது தடையில்லாமல் போய்க் கொண்டு தான் உள்ளது.

பல்லக்கில் பயணம் செய்பவன் புண்ணியவான் அவரை தூக்கி சுமப்பவன் பாவி என்ற கோட்பாடு உள்ளது. பல்லக்கில்  தூக்கி சொல்வதை ஆதினமே வேண்டாம் என்று சொல்ல வேண்டும். நானும் ஆதினத்தை மதிக்கிறேன் ஆனால் இந்து மத  பண்பாடு கோட்பாடை நான் வெறுக்கிறேன். நாங்கள் சைவர்கள். பட்டண பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் நான் அதை எதிர்க்கிறேன் ‌ஏற்கவில்லை.  நான் என்னுடைய  தமிழ் மொழி மேல் உறுதியாக உள்ளேன்.இந்தி முக்கியம்தான்.இந்தி படிக்கவேண்டும் என்றால் ஏன் படிக்க வேண்டும்  என்று சொல்ல வேண்டும். இந்தி பேசுகிறவர்கள்  நல்லவர்கள் என்றால் இந்தி பேச தெரியாதவர்கள் கெட்டவர்களா.? தொடர்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமே போதும் என்றார்.