எங்கள் நாடு தமிழ்நாடு! இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு - சீமான் ஆவேசம்

 
seeman

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வலியுறுத்திய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது:  பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னாடி, திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது. எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு. இது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரியாக இருக்கும். சுப்ரமணியசாமி ஐயாவுக்கு சரியாக இருக்கும்.  எனவே தேவையில்லாதவற்றை பேசிக்கொண்டிருக்க கூடாது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நமக்கு கோடி வேலை இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.