மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும்!!

 
pmk

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

tn

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டத்தை பாழாக்கும், வாழ்வாதாரங்களை சிதைக்கும், புவிவெப்பமயமாதலை ஊக்குவிக்கும், தமிழர்களுக்கு வேலை கொடுக்காத #NLC நிறுவனம் வெளியேற வேண்டும். 25000 ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சியை முறியடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , #NLC-யை வெளியேற்ற வலியுறுத்தி எழுச்சி நடை பயணம். இன்றும் நாளையும்.வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை! என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க விட மாட்டோம். சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.