திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!

 
tn

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 tn

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள்  கடத்தல் குறித்து டெல்லி என அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் சோதனை நடைபெற்று வருகிறது.

nia

தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம் . அந்த வகையில் சமீபத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை நடைபெற்று வருகிறது.  முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,  டெல்லியில் நடைபெற்ற குற்ற சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையும், விசாரணையும் முடிவடைந்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்றார்.குறிப்பாக  இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கி உள்ள நிலையில் சிறப்பு முகாமில் விசாரணை நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.