திருடவந்த இடத்தில் பொருட்கள் கிடைக்காததால் தீவைத்து சென்ற திருடர்கள்

 
theft

செங்கல்பட்டு அருகே சிவன் கோவிலில் திருட முயற்சித்து பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் அங்கிருந்த கொட்டகை கொளுத்திவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Old Temples: PULIPPAKKAM SIVAN TEMPLE

புலிப்பாக்கம் பகுதியில் மலைமீது இருக்கும் சிவன் கோயிலுக்கு அதிக அளவில் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். நள்ளிரவு ஆட்கள் நடமாட்டமும் கோயில் பூசாரியும் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள் திருட முயற்சித்து சிசிடிவி வயர்களை துண்டித்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இந்நிலையில் கோவிலில் எந்த பொருட்களும் கிடைக்காத ஆத்திரத்தில் கோவிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள கூரைக் கொட்டகைக்கு தீ வைத்தவிட்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த  2 இலட்சம் மதிப்பிலான பொருட்கள்  முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.