என் போன் ஒட்டு கேட்கப்படுகிறது - தமிழிசை புகார்

 
t

தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

 தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டது முதல் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவுக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.   இருவருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

ச்ர்

 இந்த நிலையில்,  தனது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகிறது என்று புகார் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் . முன்னாள் உதவியாளர் துஷார்,   தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து தனது ஃபோன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் தமிழிசை .

தெலுங்கானா மாநில முதல்வருக்கும் தமிழிசைக்கும் மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில் தமிழிசையின் இந்த புகார் அம் மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.