என் உயிர் தமிழகத்தில் தான் போகும் - தமிழிசை உருக்கம்

 
ட

 நான் ஒரு தமிழச்சி வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாகத் தான் சென்று இருக்கிறேன்.   தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதை பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு.  என் உயிர் தமிழகத்தில் தான் போகும் என்று சொல்கிறார்  தமிழிசை சௌந்தரராஜன்.

அந்த மாநில அரசியலை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைந்து எல்லை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   இப்போது தமிழிசையின் அரைகுறை அரசியலில் அறிவில் எழுந்த கேள்வியை பார்ப்போம்... தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளை திறப்பதை தடுப்பது ஏன்?  நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தி திணிப்பு? என்று கேட்டிருக்கிறார்.

 தமிழிசை இப்படி இந்தி இசையாக மாறிஇருக்கிறார்.     தமிழிசையின் கூற்று ஏற்புடையதுதானா நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தி திணிப்பு இருக்கிறது என்கிற ஒரு அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார் தமிழிசை என்று முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்திருந்தது.

ட்ட்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  புதுக்கோட்டையில் தனியார் கேரளா ஆயுர்வேதிக் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  ’’தேசிய கல்விக் கொள்கையால் தாய் மொழியை ஊக்கப்படுத்துவதற்காக தான் பிரதமர் கொண்டு வந்திருக்கிறார்.   புதிய கல்விக் கொள்கையால் இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நான் சொன்னேன் .  ஆனால் இந்தியை பற்றி சொல்கிறேன் என்று ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .

ஒரு சிலர் தமிழகத்தில் ஏன் இவர் வாலை நீட்டுகிறார் என்று கேட்கிறார்கள்.   நான் ஒரு தமிழச்சி.  வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாகத்தான் சென்றிருக்கிறேன்.  தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு.   என் உயிர் தமிழகத்தில் தான் போகும் என்றார்.

அவர் மேலும் அது குறித்து பேசிய போது,   ’’எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் இருக்கிறது. என்னை எதிர்த்துப் பேசுபவர்கள் முழுமையாக தமிழில் பேச முடியுமா கம்பர் ராமனை பற்றி பேசியதாலேயே கம்பராமாயணம் மட்டுமல்ல கம்பரும் மறைக்கப்படுகிறார். மறுக்கப்படுகிறார்.  நான் கம்பரையும் போற்ற வேண்டும் திருவள்ளுவரையும் போற்ற வேண்டும்.  கம்பராமாயணத்தையும் போற்ற வேண்டும்.   புதுச்சேரியில் துணை நிலை கவர்னரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.    எனக்கு முதலமைச்சருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் கிடையாது அரசியலமைப்பில் ஆளுநருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.    இவை அரசியல் ஆக்க கூடாது என்பதுதான் எனது கருத்து’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.