என் உயிருக்கும் ஆபத்து - நடிகையின் கணவர் கதறல்

 
ச்

என் மனைவியை  தற்கொலைக்கு தூண்டியவர்களால் என் உயிருக்கும் ஆபத்து என்று கதறுகிறார் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்.

 பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா.   இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியை அடுத்த தனியார் ஓட்டலில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பியவர் அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பாக தகவல் வெளியானது.

ச்ஹி

சித்ராவின் தற்கொலையில் அரசியல் பிரமுகர்களை இணைத்து அப்போது பேச்சுக்கள் எழுந்தன.

 சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின்  பெற்றோர்கள் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு  விசாரணைக்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஹேம்நாத்.

இந்தநிலையில்,  என் மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்களால் எனக்கும் ஆபத்து இருக்கிறது . எனக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.

 என் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய அரசியல் பின்னணி கொண்ட கும்பலால்  என் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று சித்ராவின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.