என் கணவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் - கலங்கும் சின்மயி

 
s

என் கணவர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார் என்று பாடகி சின்மயி  அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.   தேவ ராகுல் என்பவர் மீது அவர் புகார் அளித்திருக்கிறார்.

 திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி(37).  இவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  அந்த புகாரில் ,  என் கணவர் ராகுல் ரவீந்திரன் போட்டோசூட் கம்பெனி நடத்தி வருகிறார்.   எங்கள் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி தேவ ராகுல் என்பவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு வருகிறார். 

ச்

 இது அப்பட்டமான மோசடி.   இதனால் என் கணவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்து வருகிறார்.   அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சின்மயி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.