தமிழகத்தில் மூத்த குடிமக்கள் கொலை செய்யபடுவது தொடர்ந்து அதிகரிப்பு..

 
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் கொலை செய்யபடுவது தொடர்ந்து அதிகரிப்பு..

தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ,  தகவல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.  

கொலை

இதுதொடர்பாக தகவல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், மூத்த குடிமக்கள் தொடர்புடைய 191 கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்டவர்களில் 202 பேர் 60 வயதுக்கும் அதிகமானோர்  என்பது தெரியவந்துள்ளது.  அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில்  1,686 கொலை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில்  11. 3 %  பேர் அதாவது 191 பேர்  மூத்த  குடிமக்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.  அதேபோல்  2020 ம் ஆண்டில்   1,661 கொலை வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்ட நிலையில்,  மொத்தம்  1,484 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 177 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். தொடர்ந்து  கடந்த  2019ம் ஆண்டில்   1,572 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ,  அது தொடர்பாக   1,745 கொலை வழக்குகள்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.   கொலையானவர்களில்  173 பேர் மூத்த குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இறப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளில் கொலை சம்பவங்களும்,  கொலை வழக்குகள் பதிவானதும் குறைந்திருக்கிறது.  ஆனால்,  அதேநேரம்  மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படுவது   அதிகரித்து வருவதை காட்டுகிறது.  தமிழகத்துக்கு அடுத்தபடியாக  கடந்த ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  2,142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  அவர்களில்  181 மூத்த குடிமக்கள் அங்கு  கொலை செய்யப்பட்டுள்ளனர்.  தகவல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை படி, அதிகம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு (1,686)  7வது இடத்தில் உள்ளது. இதில்   உத்தரப் பிரதேசமும் (3,717 வழக்குகள்) முதலிடத்திலும்,  பிகார் (2,799), மகாராஷ்டிரா (2,330), மத்தியப் பிரதேசம் (2,034), மேற்கு வங்கம் (1,884), ராஜஸ்தான் (1,786), ஆகிய மாநிலங்கள்  அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.