"அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடக் கூடாது" - கே. பாலகிருஷ்ணன் அறிக்கைக்கு முரசொலி விமர்சனம்!!

 
tn

மின் கட்டணம் உயர்வு தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் "அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடக் கூடாது" என்ற தலைப்பில் விமர்சன கட்டுரை வெளிவந்துள்ளது.

tn

அதில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்ற வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை . தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கணத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசியல் ஈடுபட வேண்டி உள்ளது. இதனை தோழர் பாலகிருஷ்ணன் நன்கு உணர்வார். ஏனென்றால் மார்க்சிஸ்ட் ஆளும்  கேரளத்தில் கூட மின்கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது.  தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்கட்சியினர் இன்று குரல் கொடுப்பது போல கேரளத்தில் மின்கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர். அதையும் தோழர் பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்.

ttn

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசை மின் கட்டண உயர்வை வேறு வழியற்ற நிலையில் தான் அறிவித்திருக்கும் என்பது நமக்கு தெரியும்.  தோழர் பாலகிருஷ்ணனுக்கும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளது.  அத்துடன் நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கி திரும்பி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை.  திமுக கூட்டணி கட்சி ஆயிற்றே;  இந்த மின்கட்டணம் உயர்வால் அந்தக் கட்சிக்கும்,  ஆட்சிக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தோழர் பாலகிருஷ்ணன் இத்தகைய  அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம்.  ஆனால் கழகத்திற்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் இடையே சிண்டு முடிந்து வலிமைமிகு கூட்டணியை முறித்து விட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கை தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது  ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.