முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனம் - குஷ்புவுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்

 
Kushboo

திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக, நடிகை குஷ்புவுக்கு முரசொலி நாளதழில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தமிழக பாஜக சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, திமுக குறித்து முதலமைச்சர் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இந்ந நிலையில், குஷ்புவின் பேச்சுக்கு தி.மு.க. இப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் எழுதி இருப்பதாவது:-  பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 'தாவல் திலகம்' குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன 'தாவல் திலகம்' என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும். அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவியதால் 'தாவல் திலகம்' என்ற பட்டம் பொருத்தமாக இருக்குமல்லவா. அந்த 'தாவல் திலகம்'தான் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில், முதல்-அமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார். இதையும் படியுங்கள்: ஆன்லைனில் பீரோ விற்க முயன்ற தாய்-மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி "முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை. எழுதிக் கொடுப்பதைத் தான் அவர், படிப்பது வழக்கம்" எனத் தேவையின்றி முதல்வர் குறித்து விமர்சித்துள்ளார். மின்கட்டண உயர்வு 'ஷாக்' அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது எனத் துடித்துத் துவண்டுள்ளார். அம்மையார் பா.ஜ.க. வின் தேசிய அளவில் பதவி வகிப்பவர். 

kushboo

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதா மாதம் சகட்டுமேனிக்கு ஏற்றிய போதும், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்தித்திக்கொண்டே இருந்த போதும், அதன் விளைவாலும், ஜி.எஸ்.டி. போன்ற ஒழுங்குமுறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விண்முட்ட விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளைப்பாதிக்காத வகை யில் பால் விலையை ஏற்றி, பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது கண்டு எரிகிறதாம்.  அதன் பெயர் வயிறு எரிவதல்ல. வயிற்றெரிச்சல். தி.மு.க. அரசு எந்தத் திட்டமிட்டாலும் ஏழை எளியவர்களைப் பாதிக்காத வகையில் போடுவதால் ஏற்பட்ட மன அரிப்பு. மின்கட்டண உயர்வுக்குப் பிறகும் மற்ற மாநிலங்களில் உள்ளதைவிட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை பலமுறையும் விளக்கியாகி விட்டது. மேலும், இப்போதுள்ள ஏற்றம்கூட மத்திய அரசு தரும் அழுத்தத்தின் காரணத்தால், என்பதும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. அம்மையார் தேசிய அளவில் அந்த கட்சியின் பொறுப்பில் உள்ளவர், அவருக்கும் அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டின் மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. மற்ற மாநில கட்டணங்கள் ஷாக் அடிப்பதில்லை. மைக் கிடைத்து விட்டது என்பதால் எதையும் பேசிவிடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால் கொடுத்த வழியிலேயே அதற்குப் பதிலும் வரும் என்பதை குஷ்பு உணர வேண்டும். தி.மு.க. பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அம்மையார் மனதைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார். அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கப் பணிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார். கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் பேசியதற்கு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் மேடையில் இருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அங்கு பேசியுள்ளார். பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்கி விடும் என்பதை அம்மையார் உணராது பேசுவது 'சும்மா இருந்தசங்கை ஊதிக்கெடுத்த' கதையாக மாறிவிட்டது. ஓவராக சில காட்சிகளில் 'ரீ ஆக்ட்' செய்தால் அது விரசமாகிவிடும் என்பது சிறந்த நடிகையான அம்மையாருக்குத் தெரியாமல் போனது ஏனோ? அம்மையார் அரசியலில் 'மைலேஜ்' எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது 'சேம் சைடு' கோல் போல ஆகிவிட்டது அவரைப்பற்றி அதாவது இன்றைய பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் பற்றி அன்றைய தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா பேசிய 'அருவருக்கத்தக்க' பேச்சு மீண்டும் வலைதளங்களில் 'வைரலாக' வலம் வரத் தொடங்கி விட்டது. தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக, அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும், அவர் பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா. அல்லது இனியாவது கேட்பாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.