பல மின் இணைப்புகள்.. ஒரே ஆதார் எண்.. - மின்வாரிய அதிகாரிகள் சொல்லும் முக்கிய தகவல்..

 
மின் இணைப்பு… மின்வாரியம் அதிரடி!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருக்கும் நுகர்வோர் , தங்கள் ஆதார் எண் மூலம் அவற்றை  இணைத்துக்கொள்ளலாம் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். 

தமிழகம் மின்வாரியம் நுகர்வோர்களின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்து உள்ளதுடன், அதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. அதன்படி,  ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வருகிறது.

மின்சாரம்

ஒருசில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றிருக்கின்றனர்.  மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை வைத்திருக்கின்றனர். அப்படியிருக்க மின் இணைபுகளுடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரித்துள்ளனர். 

ஆதார்

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,  நுகர்வோருக்கு மின்வாரியம் வழங்கிவரும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  கூறினர். மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்டமின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றுன், இதில் பிரச்சினை ஏதும் கிடையாது என்றும் தெரிவித்தனர. 

அதேபோல, வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றும்,  இதற்கான வசதிகளும் மின்வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.