நெல்லை: ரூ.1.40 லட்சத்துக்கு பெண் குழந்தையை விற்ற தாய்!

 
arrested

நெல்லை மாவட்டம் உவரி அருகே 5 மாத குழந்தையை ரூ.1.40 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

police station

நெல்லை மாவட்டம் உவரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தங்கசெல்வி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயன் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தங்கசெல்வி  உவரி அண்ணாநகரைச்சேர்ந்த அர்ஜூன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்க செல்விக்கு மீண்டும் பெண் பிறந்தது.

அந்த குழந்தையை சுனாமி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கொடுத்து வாங்கி மாரியப்பன் குழந்தையை கேரள மாநிலம் கோட்டயம் அர்பூர்கராவைச் சேரந்த செல்வகுமார்  சந்தன வின்சியா தம்பதியிடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையை கேரளா மருத்துமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் எடுத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை வாங்கியவர்கள், குழந்தை குறித்து முன்னுக்கு பின் முரணாக மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர்  தகவல் கொடுத்து நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சர்ச்சிசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து சர்ச்சிஸ் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, கேரளாவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை வாங்கிய கேரள தம்பதி செல்வகுமார், சந்தன வின்சியா, குழந்தையை விற் பனை செய்த மாரியப்பன் குழந்தையின் தந்தை அர்ஜீன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்