திமுக எம்.எல்.ஏவின் மாமியார் தீ விபத்தில் உயிரிழப்பு

 
ff

திமுக எம்எல்ஏவின் மாமியார் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

 திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்.   திமுக எம்எல்ஏவான இவரின் மாமியார் சகுந்தலா.  இவர் சென்னையில் சூளைமேடு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்துள்ளார்.  தனது மகளுடன் சூளைமேட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

c

 89 வயதான இந்த மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலையில் வீட்டில் பூஜை அறையில் வழிபாடு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டி சகுந்தலா கட்டி இருந்த காட்டன் புடவையில் விளக்கில் இருந்து தீ பற்றி இருக்கிறது.   காட்டன் புடவை என்பதால் சட சடவென்று உடல் முழுவதும் பற்றி எரிய தொடங்கி இருக்கிறது.   இதில் சகுந்தலா என்ன செய்வதென்றே தெரியாமல் அலறி துடித்து இருக்கிறார்.

 அவர் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்த வேலையாட்களும் மகளும் ஓடி வந்து பெட் சீட்டை எடுத்து உடலில் போர்த்தி தீயை அணைத்து இருக்கிறார்கள்.  அதன் பின்னர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  அப்போது அந்த மருத்துவமனையில் முக்கிய மருத்துவர்கள் இல்லாததால்,   வானகரத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 90% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சகுந்தலா இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.  இதை அடுத்து சகுந்தலாவின் மரணம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.