8 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பணந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால் (40). சென்டிரிங் கூலி தொழிலாளியான இவரது மனைவி செல்வி (42). நேற்று மாலை தனது 8 வயது மகள் பிரியதர்ஷினியுடன் வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Every hour, one student commits suicide in India - Hindustan Times

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது மகன் சுகந்தன் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்து  வேலைக்கு சென்ற தந்தைக்கு போன் செய்து  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் இறந்துவிட்டது உறுதியானது.

இறந்த செல்வி தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும், மருந்து வைத்து விட்டதாகவும் கூறி அடிக்கடி தேவகோட்டை  சென்று மருந்து எடுப்பதாக  கூறி வருபரிடம் மருந்து எடுக்க சென்று வந்ததாகவும், இது குறித்து மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்ற போது இது மன பிரம்மை என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து  தான் இறந்து விடுவேன், எனக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்று கூறி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இறந்த பிரியதர்ஷினி அங்குள்ள சிவன் கோவில் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவர் உடல்களையும் கைப்பற்றிய காரைக்குடி தெற்கு போலீசார்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது