பொதுக்குழுவுக்கு புறப்பட்ட அதிமுகவினர் விபத்தில் காயம் - 15ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!!

 
accident

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இன்று காலை 9:15 மணிக்கு அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது.  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இக்கூட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு  வெளியாகிறது.

tn

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள உறுப்பினர்கள் காலை முதலே பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.  தீவிர சோதனைக்கு பின் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

accident
இந்நிலையில் சென்னை வானரகத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்ட அதிமுகவினர், மதுராந்தகம் அருகே விபத்தில் காயம் அடைந்துள்ளனர். அதிமுகவினர் சென்ற வேன், கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த அதிமுகவினர், சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.