மாதம் ரூ. 47,000 சம்பளத்தில் SBI-ல் வேலை.. மொத்தம் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள்..

 
SBI


ஸ்டேட் பேங்கில் காலியாக உள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும்  விற்பனை பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பணி - ஜூனியர் அசோசியேட் (  வாடிக்கையாளர் ஆதரவு மற்றும்  விற்பனை பிரிவு )

 மொத்த காலிப்பணியிடங்கள்  - 5,008

கல்வித்தகுதி  - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  இளாநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

வயது வரம்பு  -  20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்..

sbi

விண்ணப்பிக்க கடைசி நாள்  - 27 செப்டம்பர் 2022

மாத சம்பளம்  - ரூ . 17,900 - ரூ. 47,920/-

தேர்வு செய்யப்படும் முறை - முதல்நிலை தேர்வு  ( Preliminary Exam), முதன்மைத் தேர்வு  ( Mains Exam) , சான்றிதழ் சரிபார்ப்பு (certificate Verification)

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் -  நவம்பர் 2022

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்  - டிசம்பர் 2022

எஸ்.பி.ஐ. வங்கி கள்ளநோட்டுப் பிரிவு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

தேர்வு நடைபெறும் இடங்கள்  :   சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி,  மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.  

தேர்வு மொழி : தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.  

விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750/-   எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை..  

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்  www.bank.sbi/careers  என்கிற முகவரியில் பதிவு செய்து, பின்னர் www.sbi.co.in என்கிற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.